தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா பாக்யாவின் வீட்டில் கோபி சந்தோஷமாக இருப்பதால் அவரை அங்கேயே விட்டுவிட்டு வேண்டாம் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் பாக்கியா கோபி ராதிகாவுடன் தான் வாழ வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.
பரபரப்பான திருப்பங்களுடன் இந்த கதைக்களம் நகர்ந்து வரும் நிலையில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீரியல் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.
அதில் ராதிகாவோட வீடும் இல்லை, பாக்யா வீட்டை விட்டு போகணும்னு ஆர்டர் போடப் போறா, எங்க போறது நம்ம பெஸ்ட் பிரண்ட் செந்தில் ஓட வீடு இருக்கு.வேண்டாம் இருக்கவே இருக்கு நம்ம கிளவுட் கிச்சன் ஓகே ஓகே என்று பதிவிட்டு உள்ளார்.
இதனால் இனிவரும் எபிசோடுகளில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிய வருகிறது.
View this post on Instagram