ஆகாஷை செழியன் அடிக்க பாக்கியா கோபமாகியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் மற்றும் கோபி இருவரும் பேசிக் கொண்டிருக்க ஆகாஷ் போன் போடுவது பார்த்து கோபி டென்ஷன் ஆகி இருப்பது மட்டுமில்லாமல் செழியன் அவனை நேரில் பார்த்து பேசிவிடலாம் இல்லன்னா அவன் இனியா கிட்ட பேசிகிட்டு தான் இருப்பான் எப்பவுமே நம்ம இனியா கூட இருக்கவே முடியாது இல்ல அதனால அவனை நேரில் பார்த்து பேசிட்டு வந்துடலாம் இருவரும் செல்வியின் வீட்டிற்கு செல்கின்றன. செழியன் வெளியில் இருந்து ஆகாஷ் பெயரை சொல்லி கத்த ஆகாஷ் வெளியே வந்தவுடன் செழியன் கோபப்பட்டு உனக்கு என் தங்கச்சி கேக்குதா என்று சொல்லி அடித்து கையை உடைக்க போகிறார்.
உடனே கோபி எதுக்குடா இப்போ போன் பண்ண என்று கேட்க, நான் இனியாவ உண்மையாக காதலித்தேன் ஆனா இப்போ இனிமேல் பேச வேணாம்னு சொல்றதுக்கு தான் பண்ண வேற எதுக்காகவும் இல்ல என்று சொல்லியும் செழியன் எல்லை மீறி ஆகாஷை கட்டையால் அடிச்சு காயப்படுத்துகிறார் உடனே அக்கம் பக்கம் இருப்பவர்கள் வந்து செழியனை தடுத்து நிறுத்துகின்றனர்.
எங்கிட்ட வந்தீங்க எங்க ஏரியா பையன் மேல கைய வச்சுக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க யாரும் வாய தொறக்காதீங்க உங்களுக்கு அவ்வளவுதான் உனக்கு எங்க வீட்டு பொண்ணு கேக்குதா என்று அவர்களிடம் வாக்குவாதம் செய்கிறார். அதற்கு ஆகாஷ் நான் நல்லா வேலைக்கு போயிட்டு காப்பாத்தணும்னு தான் நினைச்சேன் என்று சொல்ல செழியன் கோபப்பட்டு ஆகாச தள்ளிவிட அவருக்கு கல்லில் மோதி தலையில் அடிபட்டு ரத்தம் வருகிறது உடனே அங்கிருந்து கோபி செழியனை அழைத்துச் சென்றுவிடுகிறார். மறுபக்கம் ரெஸ்டாரண்டுக்கு தயங்கிக் கொண்டு வர வேலை செய்பவர்கள் அனைவரும் செல்வியை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பாக்கியா கூப்பிட நான் இங்க வேலை செய்யணும்மா என்று கேட்கிறார் செல்வி.
இதுக்கு முன்னாடி இங்கதான வேலை செஞ்ச அப்புறம் என்ன என்று கேட்க இதுக்கப்புறம் எப்படி செய்யப் போறேன்னு தெரியல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர் போன் பண்ணி இரண்டு பேரு உன் பையன அடிச்சு போட்டுட்டு போயிட்டாங்க என்று சொல்ல செல்வி பதறிப் போய் ஆகாஷ் கிட்ட போன் கொடுங்க என்று சொல்ல, உன் பையன் இப்போ பேசுற நிலைமையில் இல்லை நீ சீக்கிரம் வா என்று கூப்பிட செல்வி அழுது கொண்டே இருக்க பாக்கியாவும் செல்வியுடன் வருகிறார். இருவரும் செல்வி வீட்டுக்கு வர அங்க இருப்பவர்கள் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம் என சொல்லுகின்றனர். இருவரும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வந்த ஆகாஷை பார்த்து செல்வி கதறி அழுகிறார் நாங்க தான் கண் காணாமல் சொல்லிட்டோமே அக்கா இப்படி அடிச்சு வச்சிருப்பாங்க என்று அழுகிறார்.
எவ்வளவு வாட்டி படிச்சு படிச்சு சொன்னேனே கேட்டையாடா உனக்கு ஏதாவது ஒன்னுனா நான் எப்படித்தான் தாங்க முடியும் என்று சொல்லி அழ பாக்யா நான் போய் டாக்டர பாத்துட்டு வரேன் என்று சொல்லி விசாரித்து விட்டு வர என்னக்கா சொன்னாங்க என்று கேட்டா ஒன்னும் இல்ல எல்லா நார்மல் தான் சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார். உன்ன அடிச்சது இனியாவோட அப்பாவும் அண்ணனும் தானே என்று கேட்க ஆமாம் என்று சொன்னால் கூட அங்கு இருப்பவர்கள் என்னதான் பணம் வந்தாலும் இப்படியா பண்ணுவாங்க என்று பேச அதற்கு பாக்யா எதுவும் பேசாமல் அங்கிருந்து கோபமாக வருகிறார்.
மறுபக்கம் இனியா சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க எழில் இந்த ஸ்கிரிப்ட் படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லு இனியா என்று கேட்க அப்புறம் படிச்சுட்டு சொல்றேன்னு என்று சொல்லிவிட்டு வெளியில் போய் உட்கார போக கோபி எதுக்கு வெளியே போற உள்ள போ என்று சொல்லுகிறார். உடனே எழில் ஏன் வெளியே கூட போக கூடாதா என்று கேட்க அவளுக்கு நீ சப்போர்ட் பண்ணிட்டு வராத என்று ஈஸ்வரி கேட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து பாக்கியா கோபமாக வருகிறார்.
பாக்கியா என்ன சொல்லுகிறார்?அதற்கு செழியன் பதில் என்ன? என்ன நடக்கப் போகிறது?என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
