தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா உங்க வீட்டுக்கு என்ன கூட்டிட்டு போறீங்களா என்று கேட்க கோபி கூட்டிட்டு வருகிறார் வரும் வழியில் ராதிகாவிடம் இனிமே நம்ம பார்க்க மாட்டோமா இதுதான் கடைசி சந்திப்பா என்று பல கேள்விகள் கேட்க அதற்கு ராதிகா நம்ம சந்திக்கவே மாட்டோம்னு நினைச்சோம் ஆனா சந்திச்சோம் பேசிக்கிட்டோம் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் ஆனா அதுல இருந்து இவ்ளோ சீக்கிரம் பிரிவோம்னு நினைக்கல அதனால எந்த நேரத்தில் எதுவும் நடக்குமோ அது நடக்கட்டும் இத பத்தி எதுவும் கேட்காதீங்க கோபி என்று சொல்லி விடுகிறார்.
கோபி எமோஷனலாக பேசிக் கொண்டே இருக்க ராதிகா சிரிப்பதை பார்த்து கோபி எதுக்கு சிரிக்கிற என்று கேட்க என்னோட ஃபேவரிட் காபி ஷாப் போயிடுச்சு என சொல்கிறார் உடனே கோபி காரை நிறுத்தி ராதிகாவிற்கு ஒரு கோல்டு காபி வாங்கி கொடுக்க ராதிகாவும் சந்தோஷமாக குடிக்கிறார். பிறகு இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து இறங்கி ராதிகா இருந்த வீட்டு தெருவை பார்த்து நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் இனியாவும் ஈஸ்வரியும் கோபி வேற போன் எடுக்க மாட்றான் மனசு மாறி முடிவு மாத்திட்டாங்களா என்னன்னு தெரியல என்று பதற்றத்தில் இருக்க செல்வி வெளியில் இவர்கள் இருப்பதை பார்த்துவிட்டு ஓடிவந்து உள்ளே சொல்லுகிறார்
இதனால் ஈஸ்வரி அதிர்ச்சியாகி மீண்டும் ராதிகா கோபியுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து விட்டதாக நினைத்துக் கொண்டு அதிர்ச்சியில் இருக்கிறார் இருவரும் ஒன்றாக உள்ளே வர பாக்கியா அவரை அழைத்து உட்கார வைக்கிறார். சமச்சிட்டு இருந்தீங்களா வாசனை கேட்டு வரைக்கும் வந்தது என்று பாக்யாவிடம் சொல்ல அவர் காபி குடிக்கிறீங்களா என்று கேட்கிறார் அதற்கு ராதிகா கோபி வர வழியில் வாங்கி கொடுத்தார் வேண்டாம் என சொல்லுகிறார்.
ஈஸ்வரி டல்லாக இருப்பதை பார்த்து நீங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க உடம்புக்கு ஏதாவது முடியலையா என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று ஈஸ்வரி சொல்லுகிறார் உடனே ராதிகா உங்க பையன் கூட வந்த உடனே டைவர்ஸ்ல இருந்து முடிவு மாற்றிவிட்டேன் என்று நினைக்காதீங்க எல்லாமே முடிஞ்சிடுச்சு நான் உங்க பையன விட்டு பிரிஞ்சிட்டேன் இனிமே நீங்க என் பையன என்கிட்ட இருந்து பிரிக்காதன்னு சொல்ல முடியாது. எங்களுக்குள்ள எல்லாமே முடிஞ்சிருச்சு என்று சொல்லுகிறார். நான் கோபியோட அன்பு கிடைக்கணும்னு மட்டும் தான் உங்க கூட சண்டை போட்டு இருக்கேன் ஆனா அதெல்லாம் நினைச்சு பார்க்கும்போது இப்ப தேவையே இல்லாதது என்று தோணுது. தயவு செஞ்சு என்ன வெறுத்துடாதீங்க நான் எந்த தப்பு பண்ணியிருந்தாலும் என்னை மன்னிச்சிடுங்க என்று கண்கலங்க ஈஸ்வரியும் அதைக் கேட்டு கண்கலங்குகிறார். நான் எப்போ சாமி கும்பிடும் போதும் இந்த குடும்பமும் என் குடும்பமா சேர்த்துதான் கும்பிட்டு இருக்க உங்க எல்லாருக்காகவும் தான் வேண்டி இருக்கேன் நீங்க என்ன ஒதுக்கிடாதீங்க வெறுத்துறாதீங்க என்று கண்கலங்கி அழ கோபி இதை கேட்க முடியாமல் ரூமுக்குள் சென்று கண்கலங்குகிறார் பிறகு ஈஸ்வரி ராதிகாவின் கையைப் பிடித்து எனக்கு உன் மேல எந்த கோபமும் கிடையாது. இனிமே வரவும் வராது எந்த ஒரு புருஷன் பொண்டாட்டியுமே எப்ப வரும் போது பசங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழ்வாங்குனு தான் நான் யோசிச்சேன் அதே மாதிரி தான் பாக்யாவும் கோபியும் அவங்களுக்குள்ள இருக்குற சின்ன சின்ன விஷயமும் பசங்களுக்காக அஜ்ஜெஸ் பண்ணிட்டு இருப்பாங்கன்னு நினைச்சா ஆனா அவன் உன்ன கல்யாணம் பண்ணிட்டு வருவான்னு எனக்கு தெரியாது என்று ஆரம்பிக்க எதுக்கத்தை என்று பாக்கியா கேட்க நான் என்ன நினைக்கிறேன் என்று இவலும் புரிந்து கட்டும் என்று சொல்லுகிறார்.
கோபி உன்ன கல்யாணம் பண்ணிட்டு வந்த போது எங்க என் பையன் என்னை விட்டு போயிடுவானோ என் பேர பசங்களுக்கு அப்பா இல்லாம போயிடுவாங்கன்னு தானே அதிகமா பயந்தேன் அதுக்காக தான் உன்ன கஷ்டப்படுத்தி பேசினேன் நான் தான் உன் கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்ன மன்னிச்சிடு நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப சந்தோஷமா இரு என்று சொல்ல ராதிகா கண்கலங்குகிறார். பிறகு இனியாவை கூப்பிட்டு எல்லா பொம்பள பசங்களுக்கும் அப்பா தான் ரொம்ப பிடிக்கும் உன்னோட அப்பா பாசத்த என்னுடைய மயூ கிட்டயும் பகிர்ந்துக்க உனக்கு இஷ்டம் இல்ல அப்படித்தானே என்று கேட்க இனிய ஆமாம் என்று தலையாட்டுகிறார். இனிமே உனக்கு அந்த பிரச்சனையே இருக்காது என்று சொல்ல இனி நான் ஒரு நிமிஷம் வந்துட்டேன் என்று சொல்லி மேலே சென்று மேக்கப் கிட்ட ஒன்றையும் செயின் ஒன்றையும் எடுத்துக் கொண்டு வந்து இதை மயூ கிட்ட கொடுத்திருங்க நான் பேசுனது உங்கள கஷ்டப்படுத்தி இருந்தா என்னை மன்னிச்சிடுங்க மயூ கிட்ட மன்னிப்பு கேட்டதா சொல்லுங்க என்று சொல்ல ராதிகாவும் சரின்னு சொல்லுகிறார்.
ராதிகா பாக்யாவிடம் நம்ம எல்லாரும் ஒன்னா சாப்பிடலாமா என்று கேட்க ஒரு பத்து நிமிஷம் இருந்தீங்கன்னா உங்களுக்கு புடிச்ச மாதிரி செஞ்சிருவேன் என்று என்று சொல்லுகிறார். அதெல்லாம் வேணாம் நீங்க செஞ்சிருக்கிறது ஸ்பெஷலா தான் இருக்கும் அது மட்டும் போதும் வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிட அனைவரும் நன்றாக உட்கார்ந்து சாப்பிடுகின்றன. ராதிகா என்ன பேசுகிறார்? அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
