தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல்களின் இன்றைய மெகா சங்கமம் எபிசோடில் ஜோசப் வீட்டுக்கு வந்து பத்திரிக்கை வைத்துவிட்டு பார்க்க அதை படிக்க அதில் செழியன் பெயர் உட்பட யாருடைய பெயரும் இல்லாமல் இருப்பதை பார்த்து ஈஸ்வரி இந்த பங்சனையே நடக்க விடக்கூடாது என கோபப்படுகிறார்.
மறுபக்கம் பாக்யா திருச்செந்தூரில் மக்ரோனி ரொம்ப ஃபேமஸ் அதை ஒரிஜினலா செய்ற இடத்துல போய் பார்த்து எப்படி செய்வது என்று கற்றுக் கொள்ளணும் என யோசிக்கிறார். இந்த நேரம் பார்த்து கோமதியும் மீனாவும் கோவிலுக்கு போயிட்டு கடைவீதிக்கு போயிட்டு ஹோட்டலுக்கு வர பாக்யாவை சந்தித்து பேசுகின்றனர்.
பாக்கியா கேட்டரிங் சர்வீஸ் நடத்துவதும் இங்கே சமைக்க வந்த விஷயத்தை செல்வி சொல்ல கோமதி தன்னுடைய அண்ணன் பொண்ணுக்கு கல்யாணம் இரண்டு வீடும் பேசுவதில்லை என்பதால் என்ன கூப்பிடல அதனால நான் இங்கு வந்துட்டேன் என்று குடும்ப பிரச்சனையை சொல்லி வருந்துகிறார்.
அடுத்ததாக நிலா பாப்பாவால் கதிரும் எழிலும் கை கொடுத்து பிரண்டாகின்றனர். இங்கே கோபி ரோட்டில் அங்கங்குமாக நடந்து கொண்டு போன் பேசிக் கொண்டிருக்க வண்டியில் வரும் பாண்டியன் ஹாரன் அடிக்க பிறகு கோபிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. ராஜிக்கு கண்ணன் போன் போட்டு நீ எனக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்னு செத்து போயிடுவேன் நீ தான் காரணம் என லெட்டர் எழுதி வைப்பேன் என்று மிரட்டி போனை வைக்கிறான்.
ராதிகா ராஜியை சந்தித்து ஏன் டல்லாவே இருக்க? ஏதாச்சு பிரச்சனையா என்று கேட்க ராஜி ஒன்றுமில்லை என சொல்லிவிடுகிறார். இங்கே பாக்கியா அமைச்சர் அனுப்பிய ஆட்களுக்கு வேலையை பிரித்துக் கொடுத்து அனுப்பி வைக்கிறார். பிறகு கண்ணன் திரும்பவும் ராஜிக்கு போன் போட்டு எல்லாம் ஏற்பாடுகளையும் பண்ணி வச்சிருக்கேன் நாளைக்கு நீ என் கூட வந்துடனும் என சொல்கிறார்.
இங்கே சமைக்கும் இடத்தில் அமைச்சர் சொன்ன ஆட்கள் வேலையில் சரியாக செய்யாமல் இருக்க பாக்கியா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இவங்கள வச்சுட்டு எப்படி சமையல் செஞ்சு முடிக்கிறதுன்னு தெரியலையே என குழம்பி தவிக்கிறார்.
அடுத்து சீனில் குன்னக்குடியில் ராதிகாவின் பெரிய அண்ணன் கோபியிடம் பேசிக் கொண்டிருக்க பாண்டியன் வெளியே வர கல்யாண அலங்காரம் எல்லாம் எப்படி இருக்கு 3000 பேர் கல்யாணத்துக்கு வர போறாங்க, இந்த மாதிரி யாராவது கல்யாண பண்ண முடியுமா? கல்யாண செலவே இல்லாம பொண்ணை இழுத்திட்டு வந்து தான் சிலர் கல்யாணம் பண்றாங்க என செந்தில் கதையை பேசி பாண்டியனை வெறுப்பாக்குகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.