Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புலம்பித் தவிக்கும் கோபி, ராதிகா கொடுத்த பல்பு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

BaakiyaLakshmi Serial Today Episode Update 24-08-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு வர அங்கு பண்ணி இருக்கும் அலங்காரத்தை பார்த்து ராமமூர்த்தி சந்தோஷப்படுகிறார். எதுக்குமா இவ்வளவு பெரிய டெக்கரேஷன் எல்லாம் என்று கேட்க இது உங்களோட எண்பதாவது பிறந்த நாள் மாமா இதுதான் எங்களுக்கு முக்கியம் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் கோபி எங்க கிளம்பினாங்க என்ன பங்க்ஷன் என தெரியாமல் புலம்பி கொண்டிருக்க ராதிகா பார்த்துக் கொண்டிருக்கிறார். தண்ணி கேன் எடுக்க வந்த ராதிகாவிடம் நான் வெளியே போன என்று ஆரம்பிக்க நான் உங்ககிட்ட எதுவுமே கேட்கலையே என்று சொல்ல பல்பு வாங்குகிறார்.

கோவிலில் இனியா எழில் அண்ணா வரமாட்டாங்களா அக்கா என்று கேட்க வருவாங்க என்று சொல்லி சொல்லுகிறார். எழில் நிலா பாப்பாவிற்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்க அம்மா எங்கே என்று கேட்கிறார். கோவிலுக்கு போய் இருக்காங்க என்று சொல்லுகிறார் எழில். பழனிச்சாமி கிப்ட்டுடன் வந்து வாழ்த்து சொல்லிவிட்டு ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார்.

மறுபக்கம் அமிர்தா வாட்ச் உடன் வீட்டுக்கு வர இது யாருக்கு என்று கேட்க தாத்தாவிற்கு கிஃப்ட் வாங்கனும் இல்ல அதான் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லுகிறார் அதான் அங்க போகப் போறது இல்ல எதுக்கு வாங்கிட்டு வந்த இதுக்கு காசு என்ன பண்ண என்று கேட்கிறார்.

பங்ஷனுக்கு வந்தவர்கள் கோபி மற்றும் எழிலை பற்றி விசாரிக்க எழில் வந்துருவான் என்று சொல்லுகின்றனர். எழிலை அமிர்தா சமாதானம் செய்து பங்க்ஷனுக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்கின்றார்.

எழிலுக்காக காத்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினர்?எழில் வந்தாரா? இல்லையா? நடந்தது என்ன.. இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 24-08-24
BaakiyaLakshmi Serial Today Episode Update 24-08-24