தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நோக்கியாவின் இளைய மகனாக எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் தனி இடம் பிடித்துள்ளார் விஷால்.
இந்த சீரியலில் சிறப்பாக நடித்து வரும் இவருக்கு நடந்து முடிந்த விஜய் டிவி விருதுகள் விழாவில் சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டர் என்ற விருது வழங்கப்பட்டது. அப்போது விஷால் பேசிய போது கேமராமேன் விஷால் மற்றும் ராஜா ராணி சீரியல் நாயகி ரியா உள்ளிட்டோரை மாற்றி மாற்றி போகஸ் செய்தார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலித்து வருகின்றனர். அதனால் தான் அந்த தருணத்தில் அப்படி கேமராமேன் இருவரையும் மாற்றி மாற்றி காண்பித்துள்ளார் என கூறி வருகின்றனர்.
