தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவின் அம்மா நீ பாக்கியா போல நல்லவ மாதிரி நடிக்கணும் என சொல்ல என்னால அப்படி இருக்க முடியாது என்று சொல்கிறார்.
அதன் பிறகு ராதிகா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் இங்கே நிம்மதியா இருந்துட்டு போறேன் அந்த வீட்டில் போய் திரும்பவும் சண்டை போட்டுக்கிட்டு இருக்க முடியாது என்று சொல்லி அங்கேயே தங்கி விடுகிறார்.
இங்கே செல்வி கிச்சனில் அந்த ராதிகா திரும்பவும் வராது, வரலன்னா சந்தோஷம் என சொல்ல எழில் அப்படியே இவரும் கிளம்பி போயிட்டா நிம்மதியா இருக்கலாம் என்று சொல்கிறார். செல்வி அண்ணா அம்மா அவர அனுப்ப மாட்டாங்க அந்த ராதிகாவை விவாகரத்து பண்ண வச்சிட்டு திரும்பவும் அக்காவுக்கு உடன் கல்யாணம் பண்ணி வைப்பாங்க என்று சொல்ல அதிர்ச்சி அடைகிறார். பாக்கியா ஒன்னு ராதிகா திரும்ப இங்க வரணும் இல்லனா இவர் கிளம்பி அங்க போகணும் அப்படி இல்லன்னா நீயே பிளாக் காபி போட்டு கொடு சமைச்சு கொடு என்று என்னை தொந்தரவு பண்ணுவாங்க. என்னால அதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க முடியாது என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
இதைத்தொடர்ந்து ஒரு பக்கம் கோபி பாரின் குடித்துக் கொண்டு வீட்டில் நடந்த விஷயங்களை சொல்லி புலம்புகிறார். பிறகு கார் எடுக்க முடியாமல் குடிபோதையில் தடுமாறி எழிலுக்கு போன் செய்கிறார். அப்போது ஈஸ்வரியின் காலுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்கும் எழில் போனை எடுத்து பேச கோபி உதவி கேட்க என்னால வர முடியாது என சொல்லி போனை வைக்கிறார்.
ஈஸ்வரி கூட்டிட்டு வர சொல்ல எழில் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் ஆனால் இது மட்டும் செய்ய முடியாது என சொல்லிவிட்டு எழுந்து உள்ளே செல்கிறான். பிறகு அமிர்தா பாட்டிக்காக போய் கூட்டிட்டு வரலாம் என சொல்ல கோபி 25 வருஷமாக தன்னுடைய அம்மாவை நடத்திய விதத்தையும் தன்னை நடத்திய விதத்தையும் பற்றி பேசி வருந்துகிறார்.
இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.