தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் செழியன் ஜெனி அமிர்தா பாக்கியா என எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார் மாலினி.
இதனால் செழியன் அதிர்ச்சியாக ப்ராஜெக்ட் விஷயமாக பேசுவதற்காக வந்ததாக கூறுகிறார். இங்க சத்தமா இருக்கு ஏதாச்சு தனியா ரூம்ல உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணலாம் என்று சொல்ல பாக்கியா பாட்டியோட ரூம்ல உட்கார்ந்துக்குங்க என்று கூறுகிறார்.
பிறகு ரூமுக்குள் சென்றது செழியன் கையைப் பிடித்து மாலினி நான் உன்னை விடமாட்டேன் நீ வரலனாலும் நான் தினமும் இங்கே வருவேன் என அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு பாக்யா இதே யோசனையில் இருக்க அப்போது கணேசன் அம்மா பாக்யாவுக்கு போன் செய்து நாங்க சென்னைக்கு வந்திருக்கோம், உங்களை தனியா சந்தித்து பேசணும் என பார்ப்பதற்கு வர சொல்கின்றனர்.
அதனை தொடர்ந்து பாக்கியாவும் அங்கு வர அவர்கள் கணேஷ் உயிரோடு திரும்ப வந்த விஷயத்தை சொல்ல அதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.