Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகா மீது கோபப்பட்ட ஈஸ்வரி. நக்கல் அடித்த ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi today episode

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி கோபமாக உட்கார்ந்து கொண்டிருக்க எழில், செழியன், அமிர்தா, ஜெனி ஆகியோர் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருக்க ராதிகா வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார்.

வீட்டுக்கு வந்த ராதிகா நேராக கிச்சனுக்குள் நுழைய அங்கிருந்து பாக்யா வெளியே வந்து விடுகிறார். ராதிகா பாத்திரத்தை எடுக்க இன்னொரு பாத்திரம் தவறுதலாக கீழே விழ ஈஸ்வரி கடுப்பாகி எழுந்து உள்ளே சென்று சண்டை போட ராதிகா தவறுதலாக தான் பாத்திரம் விழுந்தது. நான் வேணும்னு போடல என விளக்கம் கொடுக்கிறார்.

பிறகு உன்னை யாரு பாத்திரத்தை பத்தி கேட்டது உன்னால சும்மா இருக்க முடியாதா? நீ எதுக்கு எப்ப பாத்தாலும் பாக்கியா கிட்ட வம்பு இழுத்துக்கிட்டே இருக்க? அவ அந்த கேண்டீன் ஆர்டர் எடுக்க கூடாதுன்னு ஏதோ சதி பண்ண அப்புறம் முட்டி மோதி போராடி கேன்டீன் ஆர்டர் வாங்கினா, பிறகு சுடிதார் போடணும்னு கண்டிஷன் போட்ட இப்படி எல்லாத்தையும் பண்ணிட்டு தினம் தினம் எதுக்கு அவகிட்ட சண்டைக்கு போயிட்டு இருக்க என கேட்க ஓ சின்ன குழந்தை இங்கேயும் வந்து கம்ப்ளைன்ட் பண்ணிடுச்சா என பாக்கியாவை நக்கல் அடிக்க ஈஸ்வரி இன்னும் கடுப்பாகிறார்.

அவ ஒன்னும் குழந்தை மாதிரி பண்ணிக்கிட்டு இல்ல நீ தான் சின்ன குழந்தை மாதிரி அவ கிட்ட எல்லாத்துக்கும் சண்டைக்கு போயிட்டு இருக்க, கோபப்பட்டு உன்னை கழுத்தை பிடித்து வெளியே செல்ல வேண்டிய அவ அமைதியாக தான் இருக்கா.. திரும்பத் திரும்ப நீ பாக்கியா கிட்ட சண்டைக்கு போன அவ கோடீஸ்வரன் சார் கிட்ட சொல்ற வரைக்கும் நான் சும்மா இருக்க மாட்டேன் என எச்சரிக்கிறார்.

உடனே ராதிகா உங்களுக்கு பாக்கியா தானே பெஸ்ட் என சொல்ல ஆமா எனக்கு அவ மட்டும் தான் பெஸ்ட் நீ எல்லாம் அவ கால் தூசிக்கு வர மாட்ட என அதிர்ச்சி கொடுக்கிறார். இந்த சமயம் பார்த்து கோபி வீட்டுக்கு வர ராதிகா வாங்க கோபி உங்க அம்மா என்னென்ன பேசுறாங்க பாருங்க என்னன்னு கேளுங்க என்று சொல்ல கோபியும் ராதிகாவை திட்டுகிறார்.

நீ வர வரைக்கும் இந்த வீடு அமைதியா, நிம்மதியா சந்தோஷமா இருந்துச்சு நீ வந்ததுக்கப்புறம் தினம் தினம் சண்ட பிரச்சனை எல்லாருடைய நிம்மதியும் போயிடுச்சு என கோபப்பட ராதிகா கோபித்துக் கொண்டு ரூமுக்கு செல்கிறார். மேலே ரூமில் என்னால உங்க எல்லாருக்கும் நிம்மதி போயிடுச்சா என கோபியோட சண்டை போட ஆமா அதான் உண்மை என கோபியும் பதிலடி கொடுக்கிறார்.

நீ வாய மூடிக்கிட்டு இருக்கிற வரைக்கும் இங்கே எதுவும் மாறப் போறது கிடையாது முடிஞ்சா வாய மூடிக்கிட்டு இரு இல்லனா கிளம்பி போய்கிட்டே இரு என கோபத்தில் கோபி சத்தம் போட ராதிகா நீ எல்லாம் ஒரு மனுஷனா? என சண்டை போட்டு அவரை கீழே தள்ளி விட்டு நான் போறேன் என வீட்டை விட்டு கிளம்பி வெளியே செல்கிறார்.

இதைப் பார்த்த செல்வி ராதிகா எங்கே போகிறார் என்று ஓடிப் போய் பார்த்துவிட்டு வந்து வீட்டில் அது வேக வேகமா அதோட வீட்டுக்கு போயிடுச்சு என சொல்கிறார். ரொம்ப சந்தோசம் திரும்பி வராம இருந்தா நல்லது என ஈஸ்வரி சொல்ல அப்படியே உன் பையனும் போயிட்டா ரொம்ப நல்லா இருக்கும் என ராமமூர்த்தி பதிலடி கொடுக்கிறார்.

அதனைத் தொடர்ந்து ராதிகா மயூவிடம் கண்ணீர் விட்டு அழ ராதிகாவின் அம்மா இந்த சின்ன விஷயத்துக்கு எதுக்கு இங்க வந்த? கோபியோட அப்பா அம்மா சப்போர்ட் இல்லாம அந்த வீட்ல எதுவும் நடக்காது, நீ பாக்கியா மாதிரி நல்லவ மாதிரி தான் நடிக்கணும் என்று சொல்ல ராதிகா என்னால அப்படி எல்லாம் நடிக்க முடியாது என்று சொல்கிறார். ஆனால் அவருடைய அம்மா நீ அந்த வீட்டில இடம் பிடிக்க நடிச்சு தான் ஆகணும் என ஏத்தி விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi today episode
baakiyalakshmi today episode