Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிக்கலில் பாக்கியா, ஜெனி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalashimi serial episode update

பாக்யாவிற்கு மீண்டும் பிரச்சனை வர கோபி சதி வேலை ஒன்றை செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா நகைகளை பேங்கில் அடமானம் வைத்தும் அவருக்கு அஞ்சு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது எழில் என்னமா பண்ண போற என்று கேட்க ரெண்டு மூணு ஐடியா இருக்கு சொல்ற என்று சொல்லிவிட்டு என்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போ என்று சொல்ல அவர் பைனான்சியரிடம் வருகின்றனர். அவரிடம் நடந்த விஷயங்களை சொல்ல நானும் கேள்விப்பட்ட ஆனா உங்க ரெஸ்டாரன்ட்னு தெரியாது என்று சொல்லுகிறார். கவனமா தான் இருப்பீங்க என்ன ஆச்சு என்று கேட்க கவனமாதான் இருந்தோம் எப்படி நடந்ததுன்னு எங்களுக்கே தெரியல என்று சொல்ல பிசினஸ்ல இது மாதிரி பிராப்ளம் வராதா செய்யும் என்று சொல்லுகிறார். அதுக்காக தான் சார் உங்கள பாக்க வந்தோம் இப்போ பணம் கொஞ்சம் ரெடி பண்ணிட்டோம் இன்னும் அஞ்சு லட்ச ரூபா தேவைப்படுது நீங்க பைனான்ஸ் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும் என்று சொல்லி கேட்க முன்ன மாதிரி இப்ப நான் பைனான்ஸ் எல்லாம் விடுறது இல்லம்மா ரொம்ப சிக்கலா இருக்கு என்று சொல்ல உடன் பாக்யா முகம் மாறுகிறது. ஆனால் உடனே பத்திரத்தில் கையெழுத்து போட்டு அஞ்சு லட்ச ரூபா தர ஆனா அதுல அம்பது ஆயிரம் பிடித்துக்கொண்டு தான் தருவ நீங்க மாசம் 50000 குடுத்து கழிச்சுக்கோங்க என்று சொன்னவுடன் எழிலும் பாக்கியாவும் சந்தோஷப்படுகின்றனர். ரொம்ப நன்றி சார் நான் கரெக்டா கொடுத்துடுவேன் என்று சொல்ல ஏற்கனவே வாங்கினதை நீங்க கரெக்டா கொடுத்து இருக்கீங்க பரவால்ல என்று சொல்லுகிறார்.

ஜெனியும் எழிலும் அனைவருக்கும் பணத்தை திருப்பிக் கொடுக்கும் வேலையை பார்த்துக் கொண்டிருக்க பாக்யாவிற்கு ஃபோன் வந்து கொண்டே இருக்கிறது எப்ப பணத்தை திருப்பி தருவீங்க இன்னைக்கு போட்டுருவேன்னு சொன்னீங்களே என்று கேட்க ஒவ்வொருத்தரா சென்ட் பண்ணிக்கிட்டு தான் இருப்போம் உங்களுக்கு வந்துரும் என்று சொல்லுகிறார் உடனே செல்வி போன் பேசிக் கொண்டே வருகிறார் உங்க ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வச்சு தான் எங்க அக்கா கோடீஸ்வரி ஆகப்போகுதா அனுப்பிடுவாங்க என்று பேச என்ன செல்வி என்னாச்சு என்று கேட்க ஓவரா பேசுறாங்க என் நம்பர் எப்படி கிடைச்சதுன்னு தெரியல காச கேட்டுகிட்டே இருக்காங்க என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த காச வச்சு 500 பேருக்கு சென்ட் பண்ண முடியும் மீதி பேருக்கு ராஜசேகர் சார் கொடுத்த உடனே பண்ணிடலாம் அவங்க கிட்ட நைட் வர டைம் கேட்கணும் என்று சொல்லுகின்றார் பாக்யா. இதையெல்லாம் பேசிக் கொண்டிருக்க அனைவரும் பார்த்து பாக்கியாக்கு போன் வர ரெஸ்டாரன்ட் ஏதோ பிரச்சனை என்று போன் வருகிறது. உடனே நான் வந்து சொல்றேன் என எழில கூட்டிகிட்டு சொல்கிறார். பிறகு செழியனுக்கு போன் போட்ட ஜெனி நம்ம ஏதாவது பண்ணனும் ஆன்ட்டி கடன் வாங்கி கிட்டு இருக்காங்க நம்ம ஏதாவது பண்ணனும் என்று சொல்ல செழியன் டென்ஷனாக பேசுகிறார்.

கோபி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க உடனே செழியன் ஞாபகம் வந்து போன் போடுகிறார் என்ன செய்ய எங்க இருக்க என்று கேட்டு, வீட்ல சொல்லிட்டியா என்று கேட்கிறார் நான் எப்படி சொல்றதுன்னு தெரியல பார்க்கலாம் என்று சொல்லுகிறார் அங்கே ஏன் உட்கார்ந்து கிட்டு இருக்க கிச்சனுக்கு வா என்று கூப்பிட செழியன் இல்லப்பா கொஞ்ச நேரத்துல இப்ப அம்மாவோட ரெஸ்டாரண்டுக்கு போக போறேன் என்று சொல்லுகிறார் எதுக்கு என்று கேட்க அம்மாவால கொஞ்சம் பணம் ரெடி பண்ண முடியல அதான் என்னோட சேவிங்ல இருக்கிற பணத்தை எடுத்துக் கொடுக்கப் போறேன் என்று சொல்ல கோபி கடுப்பாகி செழியனை போகவிடாமல் கிச்சனுக்கு வர வைக்கிறார்.

மறுபக்கம் பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வர அங்கு பிரியாணி வாங்கியவர்கள் காசுக்காக கூடி நிற்கின்றனர். உங்க எல்லாருக்கும் இன்னிக்கு காசு வந்துரும் என்று சொல்ல எங்களுக்கு நம்பிக்கை இல்லை இப்பவே குடுங்க என்று சொல்லுகின்றனர் ஒவ்வொருத்தருக்கு அதான் சென்ட் பண்ண முடியும் என்று எழில் எவ்வளவு சொல்லியும் அவர்கள் பிடிவாதமாக இருக்கின்றனர் உடனே பாக்யா பழனிசாமி சார் இருக்காரா பாரு என்று சொல்லிவிட்டு ஃபோன் பேச சொல்லுகிறார்.

பாக்கியா எப்படி சமாளிக்கப் போகிறார்? பணத்தை எப்படி திருப்ப கொடுக்கப் போகிறார்? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

baakiyalashimi serial episode update
baakiyalashimi serial episode update