Tamilstar
Movie Reviews

பாரம் திரைவிமர்சனம்

baaram tamil movie

வருடம் முழுக்க எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும் சில படங்கள் மட்டுமே தான் எதார்த்தமான வாழ்வியலை பேசுகின்றன. வெளித்தெரியாத நிஜத்தை படம் பிடித்து காட்டுகின்றன. அப்படி ஒரு படமாக பாரம் வெளிவந்துள்ளது. பாரம் எதனால்? பார்க்கலாமா.

ஊரில் ஒரு கிராமம். ராஜூ வாட்ச் மேனாக வேலை செய்கிறார். பணி முடிந்து வீடு திரும்பும் போது அவருக்கு விபத்து. இதில் பாதிக்கப்பட்ட அவர் படுக்கையாகி கிடக்கிறார். அவரின் உறவினர்களுக்கு இவர் இறந்துவிட்டதாக ராஜூவின் மகன் தகவல் கொடுக்கிறார். இறுதி சடங்கில் கலந்துகொள்ள ராஜூவின் அக்காவும், அக்காவின் மகன்கள் வருகின்றனர்.

கிராமத்தில் நடப்பது போல துக்க வீட்டில் அடிதடி மோதல் நடக்கிறது. ராஜூவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நினைக்கும் மருமகன் சுகுமார் மரணம் குறித்து ஊரில் விசாரிக்கிறார்.

அப்போது கிடைத்த அதிர்ச்சி தகவலால் போலிஸில் புகார் அளிக்க, எந்த நடவடிக்கையும் இல்லை, இந்நிலையில் ஊடகத்தின் பக்கம் இந்த செய்தி செல்ல கதை பரபரப்பாகிறது.

ராஜூவுக்கு நடந்தது என்ன? இந்த சம்பவத்தில் பின்னணியில் யார்? தீர்வு கிடைத்ததா என்பதே இந்த பாரம்.

பாரம் படம் திரைக்கும் வரும் முன்பே தேசிய விருது பெற்றுவிட்டது. இயக்குனர் பிரியா கிருஷ்ணசுவாமி தான் படித்த தலைக்கூத்தல் என்ற நிஜ சம்பவத்தை கருவாக கொண்டு படத்தை இயக்கியுள்ளார்.

படத்தில் நடித்தவர்களில் பலர் புது முகங்கள். இதில் ஜெயலட்சுமி, சுகுமார், ராஜூ ஆகியோர் ஏற்கனவே நடிப்பில் அனுபவம் இருப்பவர்கள். கிராம வாழ்க்கையையும், கதா பாத்திரத்தையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

வயது கடந்த முதியவர்களை சில குடும்பங்கள் பாரமாக நினைக்கிறது. கடைசி நேரத்தில் இளநீர், எண்ணெய் குளியல் என சில விசயங்களை செய்து முதியவர்களுக்கு செயற்கை மரணத்தை உண்டாக்கும் நிகழ்வுகளும் வெளித்தெரியாமல் நடைபெறுகிறது. அதை பாரம் காட்டியுள்ளது.

90 நிமிட கால அளவுகள் மட்டுமே உள்ள இப்படத்தில் சில லாஜிக் தவறுகள் இருப்பது போல தெரிந்தாலும், இப்படியும் நடக்குமா என இக்கால தலைமுறையினரிடத்தில் கேட்க தோன்றும்.

கருணைக்கொலைகள் குறித்த நீதிமன்ற வழக்கில் முழுமையான தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இப்படம் மறைமுகமாக அதை ஆதரிக்கிறதா என்ற கேள்விகள் சிலருக்குள்….

கதைக்கேற்ற காட்சி அமைப்புகள், ஒளிப்பதிவு..

கதை இக்கால தலைமுறைக்கான செய்தி..

சமூகத்திற்கான விழிப்புணர்வு….

கேமிரா வேலைகளுக்கு இன்னும் முக்கியத்துவம் அளித்திருக்கலாம்…

மொத்தத்தில் பாரம் ஒரு வலி நிறைந்த பாடம். முதுமை சுமையல்ல..

சமூக விழிப்புணர்வாக பார்க்க வேண்டிய படம்..