Tamilstar
Health

கொரோனா 14 நாட்களில் குணமடைய ஆயுர்வேத மருந்து அறிமுகம் செய்த பதஞ்சலி

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆயுர்வேதம் மற்றும் நுகர்வோர் நிறுவனமான பதஞ்சலி, தற்போது உலகமே அஞ்சி நடுங்கி வரும் கொரோனா-விற்கு ஆயுர்வேத மருந்து அறிமுகம் செய்துள்ளது.

உலகில் பல நூறு நிறுவனங்கள் கொரோனாவை ஒழிக்கப் பல கோடி ரூபாய் செலவு செய்து இரவு பகல் பாராமல் மருத்து கண்டுபிடித்து வரும் அதே வேலையில் யோகா குருவான பாபா ராம் தேவ் தலைமையிலான பதஞ்சலி நிறுவனம் மருந்து கண்டுபிடித்துள்ளது.

கொரோனா நோயைக் கட்டுப்படுத்தும் இந்த மருந்தை இன்று அதிகாரப்பூர்வமாகச் செய்தியாளர்கள் முன்னிலையில் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் வெளியிட்டுள்ளனர்.

பாபா ராம்தேவ்

இந்த மருத்து வெளியீட்டு நிகழ்ச்சியில் யோகா குரு பாபா ராம்தேவ், இந்தியாவிலேயே முதல் முறையாக ஆயுர்வேத முறையில் மருத்துவக் கட்டுப்பாடு, ஆராய்ச்சி செய்யப்பட்டு, ஆதாரம் மற்றும் சோதனை அடிப்படையில் கொரோனாவிற்கான ஆயுர்வேத மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்து பயன்படுத்தியதன் மூலம் 3 நாட்களில் 69 சதவீத நோயாளிகளும், 7 நாட்களில் 100 சதவீத நோயாளிகள் குணம் அடைந்துள்ளார்கள் என ஹரித்வார்-ல் நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

ஆச்சார்யா பாலகிருஷ்ணா

இதுகுறித்து பதஞ்சலி நிறுவனத்தின் சிஇஓ-வான பாலகிருஷ்ணா ஆச்சார்யா கூறுகையில், கொரோனா தொற்று அதிகமான உடனேயே மருத்து கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் விஞ்ஞானிகள் கொண்ட அணியை நியமித்தோம். முதலில் இந்த வைரசைப் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், எதிர்க்கவும் பல்வேறு மாதிரிகளை உருவாக்கினோம். இதன் பின்பு அதை மருத்துவ முறையில் ஆய்வு செய்து 100க்கும் அதிகமான கொரோனா பாசிடீவ் நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்தோம்.

14 நாட்கள்

எங்களுடைய மருந்தை எடுத்துக்கொண்ட கொரோனா பாசிடீவ் நோயாளிகள் 5 முதல் 14 நாட்களுள் கொரோனா நெகட்டிவ் ஆக மாறியுள்ளனர். இதன் அடிப்படையில் தான் கொரோனாவை ஆயுர்வேத மருந்தால் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறுகிறோம். எங்களது பரிசோதனை அனைத்தும் மருத்துவக் கட்டுப்பாடுகளுள் செய்யப்பட்டவை தான் என்றும் தெரிவித்தார் ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்தார்.

இவரும் ராம்தேவ் கூறியதை போல் 3 நாட்களில் 69 சதவீத நோயாளிகளும், 7 நாட்களில் 100 சதவீத நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர் என ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறினார்.

திவ்யா

பதஞ்சலி ரிசர்ச் இன்ஸ்டியூட் நிறுவனம் கண்டுப்பிடித்துள்ள இந்த மருத்திற்குத் திவ்யா கொரோனா கிட் எனப் பெயரிடப்பட்டு வெளியிட்டுள்ளது பதஞ்சலி நிறுவனம்.

முக்கிய நிறுவனம்

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதில் தற்போது உலகளவில் Moderna, Pfizer, AstraZeneca, BioNtech, Johnson & Johnson, Merck, Sanofi மற்றும் China’s CanSino Biologics ஆகிய நிறுவனங்கள் முன்னோடியாக உள்ளது.  இந்தியாவில் ஏற்கனவே Arsenic Album 30 என்ற பெயரில் ஹோமியோபதி மருந்தும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.