Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கர்பமாக இருக்கும் விஜய் டிவி பிரபலதின் மனைவி..வைரலாகும் புகைப்படத்தால் குவியும் வாழ்த்து

baby-shower-function-for-serial actress shrija

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலின் முதல் பாகத்தில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஸ்ரீஜா. அவருக்கு ஜோடியாக சரவணன் என்ற கதாபாத்திரத்தில் மிர்ச்சி செந்தில் நடித்திருந்தார்.

இந்த சீரியலின் மூலம் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆகி 8 ஆண்டுகள் கழித்து ஸ்ரீஜா கர்பம் ஆகியுள்ளார். இந்த நிலையில் இவருக்கு சீமந்தம் நடந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஸ்ரீஜா செந்தில் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சரவணன் மீனாட்சி தொடர் தொடர்ந்து செந்தில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.