தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு எப்போதும் கிடைத்து வருகிறது. இப்போதும் லாபத்தை கொடுக்கும் படங்களாக இவர்களது படத்தின் வசூல் இருந்து வருகிறது.
இருந்த போதிலும் அஜித் விஜய் போன்ற பெரிய நடிகர்கள் வாங்கும் சம்பளம் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் தயாரிப்பாளர் கே ராஜன். எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் பெரிய நடிகர்களை திட்டி தீர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இப்படியான நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் அஜித் விஜயை நீ எப்படி திட்டலாம்? அவர்களுக்கும் சிறு பட்ஜெட் படங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? திரைப்பட நிகழ்ச்சிகள் பங்கேற்க பணத்தை வாங்கிக் கொண்டு பெரிய நடிகர்களை இப்படி பேசக்கூடாது. நான் சினிமாவில் இருக்கும் சாக்கடையை அகற்ற முயற்சி செய்து வருகிறேன். நான் எதையும் ஆதாரமில்லாமல் பேச மாட்டேன் என்னிடம் பத்திரிக்கையாக ஆதாரங்கள் உள்ளன என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.