Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தமிழகத்தில் தோல்வி.. வட இந்தியாவில் பெரும் சாதனை படைத்த விஜய்யின் தோல்வி திரைப்படம் – வெளியான மாஸ் தகவல்

 தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக பிகில் என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்கட்டும் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி தமிழகத்தில் தோல்வியை தழுவிய திரைப்படம் பைரவா. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

தற்போது இந்த படத்தை டப் செய்து வட இந்தியாவில் வெளியிட 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்த தகவல் வெளியாக விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விஜயின் தோல்வி படத்திற்கு வட இந்தியாவில் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.