தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் பாலா. தனித்துவமான ஸ்டைலில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தவர் இவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்தநிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பாலா 18 வருடங்களான நிலையில் சமீபத்தில் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களின் விவாகரத்துக்கு காரணமாக பல்வேறு விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்த நேரத்தில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றில் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். பாலா திருமணத்தின் மீது விருப்பம் இல்லாமல் பெற்றோர்கள் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொண்டார். பல நாள் வீட்டுக்கு வராமல் ஆபிஸிலேயே தூங்கி விடுவார். கணவர் தன் மீது பாசமாக இல்லாத காரணத்தினால் விட்டு மலர் ஏற்கனவே கல்லூரி படிக்கும்போது காதலித்து வந்த ஒரு அரசியல்வாதியின் மகனுடன் சேர்ந்து அடிக்கடி வெளியில் சுற்றி வந்துள்ளார்.
இதனால் ஏற்கனவே பல பஞ்சாயத்துகள் நடந்த நிலையில் தற்போது விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து விட்டனர் என கூறியுள்ளார். இவர் அளித்துள்ள இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்தால் தான் தெரியும்.