“சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. ‘கலக்கப்போவது யாரு’ எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ.3 லட்சம் செலவில் நிவாரணப் பொருட்களை நடிகர் பாலா வழங்கியுள்ளார். அதாவது, பள்ளிக்கரணையில் உள்ள 120 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், துரைப்பாக்கம் பல்லவன் நகரில் உள்ள மக்களுக்கு ஆடை மற்றும் உதவித் தொகையை வழங்கியுள்ளார்.இதற்கு முன்பு நடிகர் பாலா ரூ.2 லட்சம் செலவில் 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிவாரணமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.