தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் போட்டியாளர்கள் கடந்து வந்த பாதை குறித்த டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் அனைத்து போட்டியாளர்களும் அவர்களின் சோகக் கதை பற்றி பேசி கண்ணீர் விட்டனர். அதிலும் குறிப்பாக பாலாஜி முருகதாஸின் சோகப் பக்கம் பலரையும் கண்கலங்க வைத்தது.
அதாவது தன்னுடைய பெற்றோர்கள் ஆல்கஹால் அருந்துபவர்கள். அப்பா என்னை இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருக்கும்போது அடிப்பார். அம்மா ஒரு நாள் கூட எனக்கு சமைத்துக் கொடுத்தது இல்லை. என்னுடைய மிஸ் தான் எனக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பார்.
பிள்ளைய பாத்துக்க தெரியாதவங்க எதுக்கு குழந்தை பெத்துக்கணும் என கேள்வி எழுப்பியிருந்தார். அவருடைய இந்த பேச்சு பலரையும் கண்கலங்க வைத்தது.
அதேசமயம் பெற்றவர்களை பற்றி இப்படி பொது வெளியில் பேசுவது தவறு எனவும் அவர் மீது விமர்சனங்கள் வலுத்தன.
இந்த நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸ் பீரில் குளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அப்பா அம்மா சரக்கு அடிப்பாங்க என அவ்வளவு பேசினீங்க, இதுக்கு என்ன சொல்ல போறீங்க.. நீங்க சொன்னது எல்லாமே பொய்யா என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.
யோக்கியன் #BalajiMurugaDoss 😄ஏழை தாயின் மகன் ..குடிகார பெற்றோரின் மகன் .. பாவம் ல 😞
ச்சா ஒரு மனுஷன் குளிக்க கூட பாத்ரூம் இல்லாம ஷாம்பு வாங்க கூட காசு இல்லாம பீர் ஊத்தி குளிக்கிறாரு பாவம்😑#BiggBossTamil4 #BiggBossTamil pic.twitter.com/hzqpHWSrAr
— 𝕽𝖔𝖒𝖆𝖓𝕰𝖒𝖕𝖎𝖗𝖊 (@Positivevibessa) October 11, 2020