ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பாட்ஷா. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் சின்னத்திரை தொடர்களையும் இயக்கி இருக்கிறார். இந்நிலையில் இவர் ‛இன் த நேம் ஆப் காட் என் தெலுங்கு வெப்சீரிசை தயாரித்துள்ளார். பிரியதர்ஷி, நந்தினி மற்றும் பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் முத்துகுமார் எழுதி இயக்கியுள்ளார்.
வெப்சீரிஸ் குறித்து அவர் கூறுகையில், ‛‛காலமாற்றத்தில் ஒரு புதிய காட்சி வடிவம் இந்த வெப்சீரிஸ். இத்தளத்தின் மீது இரண்டு ஆண்டுகளாகவே ஈர்ப்பு இருந்தது. நல்ல எதிர்காலம் உள்ள, சுதந்திரமான தளமிது. நினைத்ததை அப்படியே கொண்டு வரமுடிகிறது. இதை தயாரிக்க அல்லு அர்ஜுன் முக்கிய காரணம். அவருக்கு நன்றி. தெலுங்கில் வெளியாகியுள்ள இத்தொடர், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வரலாம்,” என்றார்.