தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில் முதல் வாரமே அனன்யா வெளியேற்றப்பட்டார்.
இதை தொடர்ந்து பிக் பாஸூடுடன் இரண்டு மணி நேரம் போராடி வீட்டை விட்டு பாவா செல்லதுரை வெளியேறி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஆமாம், சரவணன் விக்ரம் தன்னை சோம்பேறி என சொன்னது, சக போட்டியாளர்கள் வயது வித்தியாசம் இன்றி பேசியது என பல விஷயங்களை வைத்து பாவா செல்லதுரை வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது.
இன்றைய ப்ரோமோவிலும் இவர் இடம் பெறாதது இந்த தகவலை மேலும் உறுதி செய்துள்ளது.