தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் லியோ.
தொடர்ந்து வசூல் வேட்டையாடி வரும் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்காத நிலையில் அதற்கான காரணம் குறித்து பேசி உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
அதாவது திரிஷாவால் தான் சங்கீதா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். படத்தில் விஜய் திரிஷாவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்தது அவரது வீட்டில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் இது வெற்றி விழா கொண்டாட்டமே கிடையாது. வெற்றி விழா கொண்டாட்டம் என்றால் படக்குழுவினர் தயாரிப்பாளர் அனைவருக்கும் சீல்ட் கொடுத்து இருக்க வேண்டும் அப்படி எதுவும் நடக்கவில்லை. விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்திப்பதற்காக தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிப்பில் ஏற்படுத்திக் கொண்ட ஏற்பாடு தான் என கூறியுள்ளார்.