Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“பிக் பாஸ்க்கு போனால் இதெல்லாம் பண்ணனும்”எனக்கு செட் ஆகாது : பயில்வான் ரங்கநாதன்

bayilvan-in-bigg-boss-season-7 tamil

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில் அக்டோபர் மாதத்தில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க போவது யார் யார் என்பது குறித்து ஒன்று இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில் போட்டியாளர்களின் ஒருவராக பயில்வான் ரங்கநாதன் அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு சண்டைக்கும் பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் பயில்வான்.

அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனால் சண்டை போட வேண்டும், லவ் பண்ண வேண்டும் அதெல்லாம் நமக்கு செட்டாகாது. எனவே விஜய் டிவி எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போக மாட்டேன் என விளக்கம் கொடுத்துள்ளார்.

bayilvan-in-bigg-boss-season-7 tamil
bayilvan-in-bigg-boss-season-7 tamil