Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படத்தில் இணையும் பிக் பாஸ் பிரபலம்.வைரலாகும் புகைப்படம்

BB abirami-vengadachalam-with-lokesh-kanagaraj

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

அதன் பிறகு தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய இவர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். தொடர்ந்து நான்கு படங்களில் வெற்றியை பெற்றது. தற்போது தளபதி விஜய் வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் தொடர்ந்து பல்வேறு நடிகர்கள் நடிக்க ஒப்பந்தமாகி வரும் நிலையில் பிக் பாஸ் பிரபலம் அபிராமி வெங்கடாசலம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அபிராமி லியோ படத்தில் இணைந்து விட்டார் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருந்தபோதிலும் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.