Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புதிய கார் வாங்கிய பாலாஜி முருகதாஸ்.. வைரலாகும் வீடியோவால் குவியும் வாழ்த்து

bb balaji-murugadoss-in-new car

தமிழ் சினிமாவில் பிரபல மாடலிங் துறையைச் சார்ந்தவராக இருப்பவர் பாலாஜி முருகதாஸ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று டைட்டிலையும் வென்றார்.

தற்போது பாலாஜி முருகதாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதுசா மாடு வாங்கி இருக்கோம் என ரீல்ஸ் செய்து புதிய காரை ஓப்பன் செய்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் பலரும் புதிய கார் வாங்கியுள்ள பாலாஜிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.