Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் ஜூலியா இது? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

BB Julie in Hair Coloring latest Photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னதாக மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் அறிமுகமான இவர் இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய பெயரை முழுவதுமாக டேமேஜ் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த ஜூலி மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பங்கேற்று நல்ல வரவேற்பை பெற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது ஒரு சில படங்களில் கமிட் ஆகி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் அவ்வபோது சில போட்டோக்களை வெளியிடுகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹேர் கலரிங் செய்து அடையாளம் தெரியாமல் மாறிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.