தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது சக போட்டியாளரான கவினை காதலித்தார்.
ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இருவரும் பிரேக்கப் செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது லாஸ்லியாவிடம் பேட்டி ஒன்றில் கேட்க அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது வீட்டில் இருக்கும்போது எங்களுக்குள் இடையே தொடர்பு இருந்தது. இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு எங்களுக்கு செட்டாகவில்லை. வீட்டிற்குள் நுழைந்தது போல வெளியில் மனிதர்கள் இல்லை, வேறு மாதிரியாகத்தான் தெரிந்தார்கள் என கூறியுள்ளார். இருவரும் பிரேக்கப் செய்து கொள்ள இது தான் காரணம் என கூறுகிறார்.