Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜூலியை டார்கெட் செய்த போட்டியாளர்கள்.. சூடுபிடிக்கும் பிக்பாஸ் அல்டிமேட் ..வைரலாகும் வீடியோ

BB Ultimate Day8 Promo vedio

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இருபத்தி நான்கு மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.

முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது வார நாமினேஷன் ஓபன் ஆக நடைபெற்றுள்ளது.

இதில் பெரும்பாலானோர் ஜூலியை நாமினேட் செய்துள்ளனர். ஜூலி சேஃப் கேம் விளையாடுவது போல தெரிகிறது என வனிதா கூறியுள்ளார்.

இன்னொரு ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் மனதுக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் அனைவரையும் வெளிப்படையாகக் கூற வேண்டும்.