தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து ஹாட் ஸ்டார் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களில் சிலர் தேர்வு செய்யப்பட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.
இதுவரை 5 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்ட நிலையில் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் விரைவில் வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கும் என சொல்லப்பட்டது.
தற்போது இல்லை சொல்லப்போவது கேபிஒய் சதீஷ் தான் என தெரியவந்துள்ளது. கமல்ஹாசன் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என கூறியிருந்தார். அதற்கேற்றார் போலவே இதுவரை எந்த சீசனிலும் பங்கேற்காத போட்டியாளர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என தெரியவந்துள்ளது.
இவருடைய என்ட்ரி இந்த வாரம் இருக்கும் என சொல்லப்படுகிறது.