Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா.. இவருக்கு பதில் வைல்ட் கார்டு என்ட்ரி யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

BB Ultimate Wildcard Entry Latest Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வெற்றியைத் தொடர்ந்து ஹாட் ஸ்டார் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் திடீரென அவர் நிகழ்ச்சியிலிருந்து விலகி கொண்டார். கமல்ஹாசன் வெளியேறியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

மேலும் வனிதா வலுக்கட்டாயமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். வனிதா உட்பட இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து 5 பேர் வெளியேறி விட்ட நிலையில் இந்த வாரம் புதிய வைல்ட் கார்ட் என்ட்ரி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உள்ளே செல்ல போகப்போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ஷாரிக் ஆகியோர் வெளியேற்றப்பட்டது அநியாயம் என ரசிகர்கள் சொல்லி வரும் நிலையில் இருவரில் ஒருவர் உள்ளே செல்லலாம் என சொல்லப்படுகிறது. நீங்க யார் போட்டியாளராக கலந்து கொண்டு நினைக்கிறீங்க? கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.

BB Ultimate Wildcard Entry Latest Update
BB Ultimate Wildcard Entry Latest Update