தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 5 சீசன் முடிவடைந்து ஆறாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றவர் வைஷ்ணவி.
ஆர் ஜே-வாகவும் நடிகையாகவும் வலம் வரும் இவர் ஆறு வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய நண்பரும் பைலட்டாக பணியாற்றி வருபவருமான அஞ்சன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்தை அறிவித்துள்ளனர்.
இது குறித்து ஆர்.ஜே வைஷ்ணவி வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
