Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாடர்ன் டிரஸ்ஸில் நடனமாடிய விஜயலட்சுமியை விமர்சித்த பெண்.. காரசார பதிலடி கொடுத்த விஜயலட்சுமி

bb Vijayalakshmi Reply to Haters

இயக்குனர் அகத்தியனின் மகள்தான் விஜயலட்சுமி. இவர் இயக்குனர் பெரோஸ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நிலன் என்ற ஆண் குழந்தையும் உண்டு. விஜயலட்சுமி தனது நெருங்கிய நண்பரான வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 என்ற திரைப்படத்தில் சிவாக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஒரு சில படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பின்னர் விஜயலட்சுமிக்கு பட வாய்ப்புகள் குறைந்த வந்த நிலையில் சன் டிவியில் வெளியான நாயகி சீரியலில் நடித்திருந்தார். சில காரணங்களால் அந்த சீரியலை விட்டு வெளியேறினார்.

இதனைத்தொடர்ந்து விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 2 வில் வைல்ட் கார்ட் கன்டஸ்டன்ட் ஆக சென்றார் ஆனால் அதில் இறுதிப்போட்டி வரை செல்லவில்லை. இந்நிலையில் அவர் ஜீ தமிழில் வெளியான சர்வைவர் என்ற போட்டியிலும் கலந்து கொண்டார் இதில் ஆண்களுக்கு நிகராக பல சவால்களை மேற்கொண்டு டைட்டில் வின்னர் ஆக ஒரு கோடியை தட்டிச் சென்றார்.

தற்போது அவர் மாடர்ன் டிரஸ்ஸில் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதற்கு ஒரு பெண் ” இந்த ஆட்டம் உனக்கு தேவையா ஒரு அம்மாவா இருக்க” என்று கமென்ட் செய்த பெண்ணிற்கு பதிலடியாக விஜயலட்சுமி அம்மாவானால் மூலைல உக்காந்து ஐயோ என் லைஃப் முடிஞ்சு போச்சுன்னு வருத்தப்படனுமா?நீ வேணும்னா வருத்தப்படு உனக்கு சிலை வைப்பாங்க. இது என் லைஃப் என் இஷ்டத்துக்கு நான் இருப்பேன் உங்க அட்வைஸ் கூந்தலை பின்னி நீங்களே பூ வைத்துக் கொள்ளவும் என்று சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார்.