தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தவர் விக்ரமன்.
இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ள இவர் தொடர்ந்து அரசியல் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விக்ரமனின் பிக் பாஸ் சீசன் 4 வெற்றியாளரான ஆரியை நேரில் சந்தித்துள்ளார். இது இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஆனால் இவர்களின் இந்த திடீர் சந்திப்புக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.