தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் பிரபல தொலைக்காட்சி சேனலாக திகழும் விஜய் தொலைக்காட்சியில் மக்களின் பேவரட் ஷோவாக திகழும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்கள் களமிறங்கி இருக்கும் இந்த பிக் பாஸ் வீட்டில் பல சுவாரசியமான விஷயங்கள் நடைபெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருவது ஏன் என்பதை பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களிடம் கண்ணீருடன் பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர், “நான் சம்பாதிக்கும் பணத்தை என் குடும்பத்தினருக்கு கொடுக்கக் கூடாது என்று தினேஷ் சொன்னார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது, இது ஒரு கட்டத்தில் எல்லை மீறியதே பிரச்சனைக்கு காரணம்” என்பது போல் கூறி கண் கலங்கினார். இதனால் ரச்சிதாவை அனைவரும் சமாதானம் படுத்தினர்.