தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி 35 நாட்கள் முடிவடைந்து விட்டது. இதுவரை சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா என மூவர் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று விஜே மகேஸ்வரி நான்காவது ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் பிபி வீட்டிலிருந்து வெளியேறிய மகேஸ்வரி தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதில் தனக்கு வருத்தம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் அந்நிகழ்ச்சியில் தன்னுடைய 100 சதவீதத்தையும் கொடுத்ததாக கூறியுள்ளார். அதன் பிறகு ரசிகர்களின் அன்பு தன்னை நெகிழவைப்பதாக கூறி தொடர்ந்து ஆதரவு கொடுக்குமாறும் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் பயங்கரமாக பரவி வருகிறது.