Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மருத்துவமனையில் இருந்து பீஸ்ட் பாடல் பார்த்த மூதாட்டி .. நெகிழ வைக்கும் வீடியோ

Beast Movie Arabic Kuthu Song Response

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்.

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகள் அரபிக் குத்து என்ற பாடல் காதலர் தினம் விருந்தாக வெளியாகி யூட்யூபில் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த பாடல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூதாட்டி ஒருவருக்கு மருந்தாக மாறியுள்ளது.

சிகிச்சையில் இருந்து வரும் மூதாட்டி இந்த பாடலை கேட்டு ரசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விஜய் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியான செல்பிபுள்ள பாடலும் இதேபோல் பலருக்கு மருத்துவ ரீதியாக உதவியதாக மருத்துவர்கள் சிலர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ‌‌