தமிழ் சினிமாவில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது பீஸ்ட் திரைப்படம்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து மறுநாள் வெளியான கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் பெரும் வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது. இரண்டு படங்களும் பான் இந்தியா திரைப்படங்களாக பல்வேறு மொழிகளில் வெளியாகின. ஆனால் பீஸ்ட் படத்தை காட்டிலும் உலகம் முழுவதும் கேஜிஎப் திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.
நேற்று ஆந்திராவில் கேஜிஎப் திரைப்படம் 2.35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆனால் பீஸ்ட் திரைப்படம் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎப் மற்றும் பீஸ்ட் படத்தின் வசூல் நிலவரங்களில் இவ்வளவு வித்தியாசம் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.