: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.
பீஸ்ட் டிரெய்லர் தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து நேற்று இந்தியில் வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீவிரவாத காட்சிகள், படத்தில் வன்முறைகள் அதிகமாக இருப்பதாக குவைத் அரசாங்கம் அந்நாட்டில் இந்த படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.
குவைத் நாட்டை தொடர்ந்து மலேசியாவில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கலாமா என்ற ஆலோசனை நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வன்முறை காட்சிகள் காரணமாக மலேசியாவிலும் இந்த படத்திற்கு தடை விதிக்கப்படலாம் என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
