தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து அரபிக் குத்து என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக செகண்ட் சிங்கிள் ட்ராக் வரும் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த ப்ரோமோ வீடியோ யூடியூப்பில் நம்பர் ஒன் இடத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இதுவரை 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசுர வேகத்தில் சாதனை படைத்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.