Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அடுத்த கட்டத்திற்கு சென்ற விஜய்யின் ‘பீஸ்ட்’

Beast Second Schedule Starts Rolling

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், 2-வது கட்ட படப்பிடிப்பை மே 3-ம் தேதி சென்னையில் தொடங்கத் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.

தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பீஸ்ட் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு நேற்று (01-07-2021) சென்னையில் தொடங்கியது. தனியார் ஸ்டூடியோ ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில், விஜய்- பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றன.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம் காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகி வருகிறது.