தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த படம் மட்டுமல்லாமல் இதற்கு அடுத்ததாக வெளியான கே ஜி எஃப் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
16 ஆம் தேதியான நேற்று இத்திரைப்படம் தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படம் ரூபாய் 6.04 கோடி வசூல் செய்துள்ளது. கே ஜி எஃப் 2 திரைப்படம் ரூபாய் 11.50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தொடர்ந்து நாளுக்கு நாள் பீஸ்ட் படத்தின் வசூல் குறைந்து கொண்டே வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
