தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
ஆரம்பத்தில் படத்தின் வசூல் நல்ல விதத்தில் இருந்து வந்த நிலையில் அதன் பிறகு அப்படியே படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த படத்தை தொடர்ந்து வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்புடன் வசூலும் வேட்டையாடி வருகிறது.
இந்த நிலையில் நேற்று இந்த இரண்டு படங்களின் தமிழக வசூல் எவ்வளவு என்பது பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. அதாவது கேஜிஎப் 2 திரைப்படம் தமிழகத்தில் ரூபாய் 2.07 கோடி வசூல் செய்துள்ளது.
மேலும் பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் நேற்று வெறும் ரூ 16 லட்சம் மட்டுமே வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்ஸ் கூறுகின்றன.