Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

24 மணி நேரத்தில் துணிவு படத்தின் டிரைலர் படைத்த சாதனை. வைரலாகும் அறிவிப்பு

Beast Vs Thunivu Trailer Record update

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் சமுத்திரகனி, மஞ்சு வாரியர், சிபி சந்திரன், நடிகர் பிரேம், அமீர், பாவணி உட்பட எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புத்தாண்டு தின ஸ்பெஷலாக இந்த படத்தின் டிரைலர் கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணிக்கு வெளியானது. ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.