பீட்ரூட் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.
பெரும்பாலும் காய்கறிகளில் அதிக மருத்துவ குணங்கள் உள்ள காய் என்றால் அது பீட்ரூட். பீட்ரூட்டைக் சாலட் அல்லது ஜூசாகவும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
பீட்ரூட் நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நீரிழிவு நோயாளிகள் உயர் ரத்த அழுத்த பிரச்சனையில் இருக்கும் பொழுது இது கட்டுப்படுத்தி வைத்திருக்கும். மேலும் செரிமான பிரச்சனை மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
நீரிழிவு நோயால் பெரும்பாலும் சிறுநீரகம் மற்றும் இதயம் போன்ற முக்கியமான உறுப்புகள் தான் பாதிக்கப்படும். அப்படியான நிலையில் நாம் பீட்ரூட் நம் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் பிரச்சனையில் இருந்து விடுபட்டு நம் உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறலாம்.