தொப்பையை குறைக்க குடிக்க வேண்டிய பானங்கள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்து வருகிறார்கள். அப்படி உடலில் இருக்கும் தொப்பையை குறைக்க சில ஆயுர்வேத பானங்களும் நாம் குடிக்கலாம் அது குறித்து பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்கவும் செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடவும் குடிக்க வேண்டிய முக்கியமான பானம் சீரக நீர். தினமும் காலை மாலை இரண்டு வேலையும் கொதிக்க வைத்து குடித்து வந்தால் நல்லது.
இது மட்டும் இல்லாமல் உலர்ந்த இஞ்சி பானத்தை குடிப்பதன் மூலம் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிப்பது மட்டுமில்லாமல் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக உடல் எடை குறைக்க வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். இது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுப்பது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்க உதவுகிறது.
எனவே எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்,