ஒட்டக பாலில் இருக்கும் நன்மைகளை குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டிருப்பது நீரிழிவு நோயால் தான். பெரும்பாலும் அவர்கள் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது வழக்கம். நீரிழிவு நோயாளிகளுக்கு ஒட்டகப்பால் நன்மையை கொடுக்கிறது.
ஏனெனில் இதில் கால்சியம் புரதம் பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற ஆரோக்கியம் நிறைந்த ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே இதில் இருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உணர்திறனை அதிகரிக்கிறது.
மேலும் உயர் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும் ஒட்டக பால் முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து எட்டு வாரங்கள் குடித்து வந்தால் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.
எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு ஒட்டகப்பால் ஒரு சிறந்த மருந்தாக உதவுகிறது.