கொண்டைக்கடலையில் இருக்கும் பயன்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
ஜிம்மில் மணிக்கணக்கில் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்வார்கள். அப்படி உடல் எடையை கட்டுப்பாட்டுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள கொண்டைக்கடலை உதவுகிறது.
ஏனெனில் இதில் புரதம் நார்ச்சத்து தாமிரம் கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் இரும்பு சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இது உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கிறது.
நம் உடலில் தொப்பையை குறைத்து நமக்கு ஒரு வேலைக்கு தேவையான புரதத்தை பூர்த்தி செய்ய உதவுகிறது. மேலும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைப்பதால் இதய நோய் அபாயத்திலிருந்தும் குறைக்கிறது.
கொண்டைக்கடலையை இரவில் ஊற வைத்துவிட்டு காலையில் எழுந்து சாப்பிட்டால் சிறந்தது. முளைகட்டி சாப்பிடுவது இன்னும் சிறந்ததாக இருக்கிறது.
ஆனால் குறிப்பாக எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் பெரிய பலன் கிடைக்காது.