Tamilstar
Health

தேங்காய் மட்டையில் இருக்கும் நன்மைகள்

Benefits of coconut shell

தேங்காய் மட்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

பொதுவாகவே பெரும்பாலானோர் தேங்காயை பயன்படுத்துவது உண்டு. ஏனெனில் இது ஆரோக்கியத்தை அதிகமாக கொடுப்பது என அனைவரும் அறிந்ததே. ஆனால் தூக்கி எரியும் தேங்காய் மட்டையில் இருக்கும் நன்மையை பற்றி நீங்கள் அறிவீர்களா? பார்க்கலாம் வாங்க.

நம் உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் வீக்கத்திற்கு தேங்காய் மட்டையை அரைத்து மஞ்சளுடன் கலந்து தடவி வந்தால் வீக்கம் விரைவில் குணமாகும்.

பற்களில் இருக்கும் மஞ்சள் நிறத்தை மாற்ற தேங்காய் முடியை எரித்து பொடியாக்கி சோடா கலந்து பல்லில் லேசாக தேய்த்து வர வேண்டும். தலை முடி கருமையாக வளர தேங்காய் மட்டையை சூடாக்கி நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலை முடியில் தடவி வரவேண்டும் பிறகு ஒரு மணி நேரம் கழித்து தலை முடியை கருவினால் கருமையாக இருப்பதை உணரலாம்.

பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் மட்டையை அரைத்து அந்த பொடியை வெறும் வயிற்றில் தண்ணீருடன் சாப்பிட்டு வர வேண்டும்.