அருகம்புல் சாரை காலையில் குடிப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம் வாங்க.
நாம் இருக்கும் இடத்திலேயே எளிமையாக கிடைக்கும் பொருள் அருகம்புல். மருத்துவ மூலிகைகளில் ஒன்றாக இருந்து வரும் அருகம்புல் ஏராளமான நன்மைகளைத் தரக்கூடியது.
பித்தம் அலி போன்ற நோய்களுக்கு அருகம்புல் ஜூஸ் குடிப்பதன் மூலம் நல்ல பலனைத் தருகிறது. குறிப்பாக பெண்களுக்கு வெள்ளைபடுதல் நீங்க பெரிதளவில் உதவுகிறது அருகம்புல். அருகம்புல் துளசி வில்வம் மூன்றும் சேர்த்து நன்கு அரைத்து அத்துடன் தண்ணீரை சேர்த்து நன்றாக கலக்கி பிறகு வடிகட்டி அந்த ஜூஸை குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் தெறித்து ஓடிவிடும்.
இது மட்டுமில்லாமல் உடலில் வெப்பம் சிறுநீர் அதிகரிக்கும் குடல் புண் போன்ற பிரச்சனைகளை நீக்கி உடலை வலிமையாக்கும்.
அருகம்புல் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் உடல் பருமன் குறைக்க பெரிதளவில் உதவுகிறது. இப்படி நம் அன்றாட உணவுகளில் சத்தான உணவுகளை சேர்த்து உடலை பலமாக வைத்துக் கொள்வதே சிறந்தது