துளசி டீ குடிப்பதால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
துளசி டீ குடிப்பதால் நம் உடலில் பல நன்மைகளை ஏற்படுத்தும். வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்ஷியம், பாஸ்பரஸ் , போன்ற நம் உடலுக்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய அனைத்தும் இந்த டீயில் உள்ளது.
அதுமட்டுமில்லாமல் செரிமான பிரச்சனை தவறான உணவு உண்பதன் மூலம் ஏற்படும் பிரச்சனை துளசி டீ சாப்பிட்டால் குணமாகும்.
மேலும் இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தத்தால் தூக்கமின்மை பிரச்சனை பெரும் அளவில் உள்ளது. இந்த பிரச்சனையை தவிர்க்க துளசி டீ ஒரு நல்ல மருந்தாக அமையும்.
இப்படி நம் உடலில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்க துளசி டீ பெரும் பங்கு வகிக்கிறது. துளசி டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில் துளசி இலை மற்றும் இஞ்சியை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் பிறகு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இந்த பேஸ்ட்டை சேர்த்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும்.
பிறகு டீத்தூளை சேர்த்து கொதிக்க வைத்து பால் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கொதித்த பிறகு அடுப்பை அணைத்து வடிகட்டினால் துளசி டீ தயாராகும்.
வீட்டில் எளிமையான முறையில் துளசி டீ செய்து நம் உடலில் ஏற்படும் பிரச்சனையை தவிர்த்து உடல் ஆரோக்கியத்துடன் இருப்போம்.