Tamilstar
Health

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை எனக் கூறுவர். ஆப்பிளில் உள்ள அதே அளவிற்கு சத்துக்கள் நெல்லிக்காயிலும் உள்ளது.

மிக எளிதாக நமக்கு தேவையான சத்துக்களை கொடுத்து, நமது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.

உடலை எந்த நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் காலை எழுந்ததும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாறு குடித்தால் போதுமானதாகும்.

தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிப்பதால் அதில் உள்ள புரோட்டீன்கள் கொழுப்பினை கரைத்து உடல் எடையினை குறைக்கும்.

எலும்பு உறிஞ்சி என்னும் செல்கள் எலும்பினை எளிதில் உடைய செய்யும் தன்மையுடையவை. இந்த நெல்லிக்காய் சாறினை தினமும் பருகினால் இந்த செல்களை குறைத்து எலும்பின் பலத்தினை அதிகரிக்கும்.

நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் மற்றும் சூப்பராக்ஸைடு எனும் பொருளும் உள்ளது. இவை புற்றுநோய் வருவதை தடுக்கிறது.

நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி யானது உடல் சூட்டை குறைத்து, குளிர்ச்சியாக வைக்கும்.

ரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி ரத்தத்தினை சுத்திகரிக்கும். மேலும் ரத்தசிவப்பணுக்களின் எண்ணிக்கையானது கூடும்.

நெல்லிக்காய் சாறினை தினமும் அருந்துவதால் அதில் உள்ள விட்டமின் சி யானது சரும செல்களுக்கு பாதுகாப்பை வழங்கி ஆரோக்கியமாக வைக்கிறது.